சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி திடீர் அறிவிப்பு!

சென்னை மாநகர சாலைகளில் ஓரங்களில் பல இடங்களில் தொடர்ந்து கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அவை உடனடியாக பறிமுதல் செய்து ஏலம்விடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு முறையாக நோட்டீஸ் அளிப்பதில்லை, வாகனத்தை பறிமுதல் செய்த பின்னர் அபராதம் செலுத்தி மீட்டால் வாகனத்தை சேதப்படுத்தி திரும்ப ஒப்படைப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் பெறப்பட்டன.
இதன் காரணமாக 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு, அதன் உரிமையாளருக்கு முறையான நோட்டீஸ் அளிக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பி ஒரு வார காலத்திற்குள் வாகனங்களை எடுக்கவில்லை எனில் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!