ஐப்பசி ஞாயிறு... குவிந்த மக்கள் கூட்டம்.. எகிறியது மீன்கள் விலை... மீனவர்கள் மகிழ்ச்சி!

 
மீன் மீனவர்கள் இறைச்சி

புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், இன்று ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் மீன்களை வாங்க ஆர்வமுடன் மீன் மார்கெட்களில் குவிந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் விலை உயர்ந்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்ததால், அவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர். அதே போன்று புரட்டாசி மாதத்தைக் காரணமாக கொண்டும் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர்.

மீன் மீன்கள் இறைச்சி மீனவர்கள

இதன் காரணமாக கடந்த மாதத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. தற்போது, புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து, தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

மீன் மார்க்கெட்

சீலா மீன் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதில், சீலா மீன் கிலோ ரூ.900, விளை மீன் ரூ.500, ஊளி, பாறை மீன்கள் ரூ.400, கேரை, சூரை மீன்கள் ரூ.400, மஞ்ச கிளி, ஏற்றுமதி ரக பண்டாரி ரூ.800, அயிலேஷ் ரூ.300, வரி கிளி ஆகிய மீன்கள் கூடை ரூ.2,500, விற்பனையானது. கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web