தீபாவளிக்கு டிக்கெட் ரூ.4,500... ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை... தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தீபாவளி விடுமுறை தினங்களுக்கு ஆம்னி பேருந்துகள் மூன்று, நான்கு மடங்கு கட்டணங்களை உயர்த்தி பயணிகளிடம் ஆயிரக்கணக்கில் கொள்ளையடித்து வருகின்றன. வழக்கம் போல் அமைச்சரும், அதிகாரிகளும் கடைசி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தவுடன் நேரில் ஆய்வு செய்து, கட்டணம் அதிகமாக வசூலித்தால் தண்டனை என்று அறிக்கை விடுவார்கள் என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதாரத்துடன் கோரிக்கை விடுத்துள்ளது.
பண்டிக்கை, தொடர் விடுமுறைக் காலங்களில், ஆம்னி பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிகக் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
தூத்துக்குடியில் சென்னை செல்லும் பேருந்து கட்டணம் ரூ.4500 கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!