அச்சச்சோ... 135 அடி உசரம்.. அந்தரத்தில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த காவலர்... பதற வைத்த இரண்டரை மணி நேரம்!

சென்னையில் நேற்று இரண்டரை மணி நேரமாக மக்களை பதற வைத்துக் கொண்டிருந்தார் காவலர் ஒருவர். சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்காவில், டவர் மீது திடீரென ஏறிய காவலர் ஒருவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுக்க துவங்கினார்.
அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பதற்றமடைந்து உடனடியாக போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினரும், அண்ணாநகர் போலீசாரும் குவிந்தனர்.
அண்ணாநகர் தீயணைப்புத் துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, "காவல் ஆணையர் எனது கோரிக்கையை கேட்க இங்கு உடனடியாக வரவேண்டும். என்னை மீட்கும் பணியில் ஈடுபட்டால் கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொள்வேன்" என மிரட்டல் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டரை மணிநேரமாக அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் அவரை பத்திரமாக மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பரீக் பாட்ஷா (25) என்பதும் 3வது பட்டாலியனைச் சேர்ந்தவர் என்பதும், மெட்ரோ ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது.
காவலர் தற்கொலை மிரட்டலுக்கு பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அண்ணா நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!