தவெக மாநாடு ஏற்பாடு.. அனுமதியின்றி பனை கன்றுகளை அகற்றியதால் சர்ச்சை!
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் பகுதிக்கு அருகில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி, ஒரு வயதுடைய 8 பனை மரக்கன்றுகள் வெட்டப்பட்டன.பனை மரக்கன்றுகள் வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் நிலையில், அனுமதியின்றி பனை மரக்கன்றுகள் வெட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் பரப்பளவில் 937 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. தலா 16 விளக்குகள் என 14 ஆயிரத்து 992 விளக்குகள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடை 60 அடி அகலமும் 170 அடி நீளமும் கொண்டது.
மாநாட்டு அரங்கின் இருபுறமும் தொண்டர்களின் வசதிக்காக 300 நடமாடும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு உள்ளே செல்லும் மின்கம்பிகளை அகற்றி கேபிள்களாக பூமிக்கு அடியில் புதைக்க மின்வாரியம் அனுமதி வழங்கவில்லை. எனவே, மாநாட்டு நாளில் நிலத்துக்குள் செல்லும் மின்கம்பிகள் வழியாக மின்சாரம் பாய்வதை தடை செய்ய உள்ளனர்.
திடலில் உள்ள கிணறுகள் இரும்பு கர்டர்கள் மீது மரப்பலகைகளால் மூடப்பட உள்ளது. மாநாட்டு மைதானத்தில் தொண்டர்களுக்கு உணவு வழங்க முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதனால் கூட்டம் அலைமோதும் என்பதால், மாநாட்டுக்கு வரும் வாகனங்களில் உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மாநாடு நடக்கும் பகுதிக்கு அருகில் இருந்த 8 ஒரு வயதுடைய பனை மரக்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளது. பனை மரக்கன்றுகள் வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் நிலையில், அனுமதியின்றி பனை மரக்கன்றுகள் வெட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!