லடாக் எல்லையில் மீண்டும் ரோந்து பணி.. இந்தியா - சீனா இடையே புதிய ஒப்பந்தம்!
இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடும் சீனா, அவ்வப்போது எல்லையில் அத்துமீறி நுழைகிறது. இதுபோன்ற காரணங்களால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மீண்டும் ரோந்துப் பணியைத் தொடங்க இந்தியா - சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலர் கூறுகையில், ""இந்தியா - சீனா இடையே எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, இரு நாட்டு பிரதிநிதிகளும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக, லைன் ஆஃப் ஆக்சுவல் ரோந்து செல்ல ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
