சென்னை மக்களே உஷார்... குப்பை கொட்டுவதை கண்காணிக்க கேமரா!
தமிழகத்தில் சென்னையில் பொதுஇடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டுவதை தடுக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்படும். சென்னை மநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து வெளியேற்ற வேண்டும்,

பொது இடங்களில் சாலைகளில் குப்பைகள் , கட்டிட கழிவுகளை கொட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குப்பைகள் கொட்டப்படுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
அதனை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு அறையுடன் இணைத்து நேரலையாக கண்காணிக்கப் திட்டமிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டியதாக இதுவரை ரூ18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
