காவலர் வீர வணக்க நாள்... மரியாதை செலுத்திய காவல்துறை அதிகாரிகள்!
1959 ம் ஆண்டு அக்டோபர் 21 ம் நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஓராண்டில் பணியின் போது மரணம் அடைந்த தமிழ்நாட்டு காவலர்கள் 5 பேர் உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த துணை ராணுவப்படையினர் மற்றும் காவல் துறையினர் 213 நபர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
வீரவணக்க நாள் மற்றும் வீர மரணமடைந்த காவல்துறையினர் , துணை ராணுவப் படையினருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவலர் நினைவுச் சின்னத்தில் கூடியிருந்தனர். காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளும் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!