இன்று பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்... 6 கோடி பேர் பயனடைவர்... 70+ வயதானவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை!
நாடு முழுவதும் இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 6 கோடி பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடான ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை பெறலாம். இந்த திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது.
இதில் தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக பெற முடியும்.
மூத்த குடிமக்களுக்கான காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி இன்று அக்டோபர் 29ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 4.5 கோடி குடும்பங்களை சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!