நாளை முதல் 6 மாதங்களுக்கு கிண்டி சிறுவர் பூங்காவுக்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை... திடீர் உத்தரவு!

 
கிண்டி சிறுவர் பூங்கா

நாளை முதல் கிண்டி சிறுவர் பூங்கா பராமரிப்பு மற்றும் புணரமைப்பு பணிகள் காரணமாக அடுத்த ஆறு மாத காலத்திற்கு மூடப்படுகிறது. இந்த ஆறு மாத காலத்திற்கு பொதுமக்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றிப் பார்க்க விரும்பும் ஏராளமான பிரசித்தி பெற்ற இடங்களில் குறிப்பிடத்தக்கது  கிண்டி சிறுவர் பூங்கா.  ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா சுதந்திரத்திற்கு பிறகு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1958ல் தேசிய சிறுவர் பூங்காவாக மாற்றப்பட்டது.  சென்னைவாசிகள் உட்பட, விடுமுறைக்கு சென்னை வருபவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கும்  பிடித்தமான சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு மான், நரி, கழுதை புலி, முதலை, பாம்புகள், காட்டு முயல்கள், அணில்கள், மயில், வான்கோழி, எலிகள் உட்பட  பல  உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கிண்டி சிறுவர் பூங்கா

வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்ற போதிலும் பெரும்பாலான பகுதிகள்  சேதமடைந்து பொலிவிழந்து காணப்படுகிறது. சென்னை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சர்வதேச தரத்தில் மேம்படுத்த  தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் இயற்கைக் கல்விக்கான முதன்மை மையமாகவும், வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்  உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 6 மாதங்களுக்கு இந்த பூங்காவை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கிண்டி சிறுவர் பூங்கா
இதில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பொழுதுபோக்கு பூங்காக்கள்,  தண்ணீர் விளையாட்டுக்களும் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இருப்பதை காட்டிலும் இன்னும் அதிக அளவில் விலங்குகள், பறவைகள் கொண்டு வரப்படும். அதே போல் பூங்காவிற்கு உள்ளேயே உணவகங்கள் அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நாளை ஜூன் 19ம் தேதி முதல் அடுத்த 6 மாதங்கள் வரை மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web