காரில் உட்கார்ந்து பேசும் அளவு பெரிய ஆள் இல்ல... கடுப்பான புஸ்ஸி ஆனந்த் !

 
புஸ்ஸி ஆனந்த்


 தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்  கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மும்மூரமாக செய்து வருகிறார்.  
அந்த வகையில் புஸ்ஸி ஆனந்த் இன்றைய தினம், மாநாடு வேலை நடந்து வரும் இடத்தில் இருந்த, அரசமரத்தடி பிள்ளையாரை வழிபட்டு, சூரத்தேங்காய் உடைத்து அதன்பின் விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டு பணிகளை பார்வையிட்டார் .  

புஸ்ஸி ஆனந்த்


கையில் குடையுடன் ஆனந்த், மாநாடுக்கான பணிகளை ஆய்வு செய்தார்.  அவர் காரில் ஏறிச் செல்லும் பொழுது, தவெக மாநாடு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புஸ்ஸி ஆனந்த் விருப்பம் இல்லாததை போல பதிலளித்தார்.அப்போது அவரது டிரைவர் காரை விருட்டென முன்னோக்கி நகர்த்த தொடங்கினார்.

புஸ்ஸி ஆனந்த்

அப்போது  டென்ஷனில்  புஸ்ஸி ஆனந்த், “நான் பேசிட்டு இருக்கேன்.. நீ வண்டிய எடுக்குற..” என கோபமாக கடிந்து கொண்டார். நடிகர்  விஜய்க்கு அடுத்த இடத்தில் தான்  நாங்கள் இருக்கிறோம்.  காரில் உட்கார்ந்து பேசும் அளவுக்கு தான் பெரிய ஆள் இல்லை எனவும் கூறினார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!