பயணிகள் வரவேற்பு... ரயில் நிலையங்களில் க்யூஆர் கட்டண முறை அமல்!
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்கள், முன்பதிவில்லாத டிக்கெட்கள், முன்பதிவு டிக்கெட்கள் கவுண்டர் மூலம் வழங்கப்பட்டு வந்தன. தற்போது இதனை மேம்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர் வசதியை கருத்தில் கொண்டும் அனைத்து டிக்கெட் கவுன்ட்டர்களிலும் க்யூஆர் குறியீடு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பணம் செலுத்தும் முறையை நெறிப்படுத்தவும், பணம் கையாளுதல் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கவும் பயணச் சீட்டுகள் விநியோக முறையை எளிதாக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு மையங்களில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து யுபிஐ செயலிகளின் மூலம் டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டு உறுதி செய்தவுடன் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் மையத்தில் காத்திருப்பு காலத்தை குறைக்கவும், பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்கவும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
