தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. பத்திரம் மக்களே... நீர்நிலை பகுதிகளுக்கு போகாதீங்க!

 
டெல்லியில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு

இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள், சாகசங்களைச் செய்கிறேன் பேர்வழி என்று நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லாதீங்க. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களைத் தனியே வெளியே அனுப்பாதீங்க.

5 மாவட்டங்களில் கன மழை

மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளிலும் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த வாரத்தின் இறுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதால் மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!