ஸ்பெயினில் வரலாறு காணாத மழை.. திடீர் வெள்ளத்தால் 51 பேர் பலி.. ரயில் சேவை முடக்கம்!
கனமழையைத் தொடர்ந்து ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் உள்ள வலென்சியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சாலைகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கார்கள் மற்றும் மரங்கள் அடித்து செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சிலர் அணுக முடியாத இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வலென்சியாவின் பிராந்திய தலைவர் கார்லோஸ் மசோன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் சாலைப் பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஸ்பெயினின் மாநில வானிலை ஆய்வு நிறுவனம் AEMET வலென்சியாவிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செவ்வாய் கிழமை பெய்த மழையால் தெற்கு மற்றும் கிழக்கு ஸ்பெயினின் பரந்த பகுதி முழுவதும் வெள்ளம் ஏற்பட்டது. சுமார் 300 பேருடன் சென்ற அதிவேக ரயில் மலகா அருகே தடம் புரண்டது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். வலென்சியா மற்றும் மாட்ரிட் நகரங்களுக்கு இடையேயான அதிவேக ரயில் சேவை தடைபட்டது, சேற்று நீர் வெள்ளம், பயமுறுத்தும் வேகத்தில் தெருக்களில் வாகனங்கள் மூழ்கியது.
காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மக்களை அவர்களது வீடுகள் மற்றும் கார்களில் இருந்து மீட்டனர். ஸ்பெயினின் அவசரகால பதிலளிப்பு பிரிவுகளில் இருந்து 1,000 வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க ஸ்பெயினின் மத்திய அரசு நெருக்கடிக் குழுவை அமைத்துள்ளது.

ஸ்பெயினின் தேசிய வானிலை ஆய்வு சேவையின்படி, புயல்கள் வியாழன் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயின் சமீபத்தில் இதே போன்ற ஒரு நிலையை சந்தித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் வறட்சியில் இருந்து மீண்டு வருகிறது. தீவிர வானிலையின் அதிகரித்த அத்தியாயங்கள் காலநிலை மாற்றத்துடன் இணைக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
