ரீல்ஸ் மோகம்.. ஸ்டண்ட் செய்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்.. பரிதாபமாக பலியான இளைஞர்!

 
குமார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனியை சேர்ந்தவர் குமார் என்கிற ராகுல் (21). இவர்  அவ்வப்போது ஸ்டண்ட் தொடர்பான சாகச வீடியோக்களை இன்ஸ்டாவில்  வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, நண்பருடன் வீலிங் செய்து கொண்டிருந்தார்.

இவர் உளுந்தூர்பேட்டை - சேலம் சாலை, திருச்சி இணைப்பு சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, இவரது வாகனம் ​​கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இந்த விபத்தில் குமாரின் தலை மின்கம்பத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியது. விபத்து குறித்து தகவல் அறிந்த  ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் இளைஞர் உயிர் விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!