ரூ.14 கோடி நாசம்... வல்லநாடு ஆற்றுப்பாலம் மீண்டும் சேதம்... கதறும் பொதுமக்கள்!

 
தூத்துக்குடி பாலம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இத்தனைக்கும் ரூ.14 கோடி செலவில் இப்போது தான் இந்த பாலம் சீரமைக்கப்பட்டது. கனிமொழி எம்.பி. தொகுதியிலேயே இத்தனை அலட்சியமா என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் தூத்துக்குடியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், பெரிய கம்பெனிகளுக்கு செல்லும் வாகனங்கள், விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக தான் சென்று வருகின்றன. 

தூத்துக்குடி

தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மிக பிரமாண்டமான பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆரம்பம் முதலே பாலம் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், பாலத்தில் பல முறை விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்து பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தை சீரமைக்க சுமார் ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. 

முதற்கட்டமாக பாலத்தின் மேல் முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்ட 6 மாத காலம் கூட ஆகாத நிலையில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவே கனரக வாகனங்கள் சென்ற போது மீண்டும் சேதமடைந்தது. பாலத்தில் நடுவில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது.

மோடிக்கு கடும் கண்டனம்! கனிமொழி எம்.பி ஆவேசம் !

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சேதமடைந்த இடத்தை தடுப்பு வேலிகள் வைத்து அடைத்து வைத்துள்ளனர். ஏற்கனவே பலமுறை இந்த பாலம் சேதமடைந்த நிலையில் தற்போது மீண்டும் ராட்சத பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். எனவே உயர்மட்ட பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web