எத்தனையோ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் நான் சராசரி நடிகை தான்” நடிகை சமந்தா ஓபன் டாக்!
இது வரை நான் எத்தனையோ வெற்றியைப் பெற்றிருந்தாலும் நான் இப்போதும் சராசரி நடிகை தான் என்று நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அந்த நேர்காணலில் பேசியிருக்கும் நடிகை சமந்தா, "நான் இப்போதும் சராசரி நடிகை தான். இன்னும் நடிப்பில் முதிர்ச்சியை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். எனது சினிமா பயணத்தில் எத்தனையோ வெற்றிகளை சந்தித்து இருந்தாலும் இவை அனைத்திற்கும் கூட்டு முயற்சி தான் காரணம்.

ஒரு படத்திற்கு பின்னால் நிறைய நிபுணர்களின் உழைப்பு உள்ளது. ஒரு திரைப்படத்திற்கு என்னால் திறமையான குழுவினர் இருந்தால் தான் நமது திறமை வெளியே வரும். நான் திறமையான குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம்" என்று கூறியுள்ளார்.
நாகசைதன்யாவுடனான திருமண பந்தம் முறிவுக்கு வந்த பின்னரும், நடிகை சமந்தாவுக்கு ரசிகர்களிடையே ஆதரவு தொடர்கிறது. சமந்தாவின் கம்பேக் ஹிட்டுக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், சமந்தாவின் ஆன் ஸ்கீரின் தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக சமந்தாவின் திய வெப் சீரிஸ் சிட்டாடல் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

2.51 நிமிடங்கள் ஓடக்கூடிய சிட்டாடல்: ஹனி பன்னி ட்ரெய்லர் முழுவதிலும் தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகளில் நடிகை சமந்தா மிரட்டியிருக்கிறார். இதில், நடிகர் வருண் தவான் ஜோடியாக நடித்திருக்கும் சமந்தா, பெண் குழந்தைகளுக்கு தாயாகவும், சீக்ரெட் ஏஜெண்டாகவும் நடித்துள்ளார். இந்த 3 நிமிடத்திற்கும் குறைவான ட்ரெய்லர் காட்சிகளில் பைக் ஸ்டண்ட், கார் சேஸ், துப்பாக்கிச் சண்டை என வருண் தவானுடன் இணைந்தும், தனியாகவும் மிரட்டியிருக்கிறார் சமந்தா. சமந்தாவின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
