நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!

 
விடுமுறை

  நாளை மறுநாள் இந்தியா முழுவதும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு நாளை அக்டோபர் 30ம் தேதி  அரைநாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

அறிவிப்பு

இது குறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை அக்டோபர் 30ம் தேதி  முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தீபாவளி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர். ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை ஏற்கனவே கூடுதலாக  ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக  செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web