விஜய் கொள்கையில் உடன்பாடு கிடையாது... யாருடனும் கூட்டணி கிடையாது... சீமான் பேட்டி!

 
சீமான்
 

“விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை.  நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். 

மதுரையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, “தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள அதே கோபத்துடன், 13 ஆண்டுகளுக்கு முன் நான் அரசியலுக்கு வந்தேன். திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொல்கிறார். அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது.

விஜய் தவெக மாநாடு

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. அது வேற... இது வேற... இது என் நாடு. என் தேசம். இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். அவருடைய கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒத்துப்போகவில்லை. விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. 

சீமான்

பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன் என்ற விஜய் பேச்சிலும் ஒத்துப்போகவில்லை. இது குழப்பமான கொள்கை முடிவு. மக்களிடம் செல்வதற்கு கருத்தியல் புரட்சி வேண்டும்; பிரச்சனையின் அடிவேர் தெரிய வேண்டும். பெரியாரை ஏற்கும்போது திராவிடத்தையும் ஏற்கிறார்கள். இதையே தான் திமுகவும் செய்கிறது. என் பயணம் என் கால்களை நம்பித்தான். யார் காலையும் நம்பி பயணிக்காதவன். நான் மிகுந்த தெளிவான பயணத்தை கொண்டவன். நான் தனித்து போட்டியிடுவேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை” என்று கூறினார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web