அறுவை சிகிச்சை நிறைவு!! செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது!! மருத்துவமனை அறிக்கை!!

 
செந்தில் பாலாஜி

சென்னை ஆழ்வார்பேட்டை  காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.  இதய அறுவை சிகிச்சை நிபுணர்  மருத்துவர் ரகுராம் தலைமையில்  ஆறு மருத்துவர்கள் கொண்ட குழு   அறுவை சிகிச்சையை  மேற்கொண்டது.  இதனைஅடுத்து அப்பகுதி முழுவதும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
  செந்தில் பாலாஜி
இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு இன்று காலை முதுநிலை ஆலோசகர் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்  ஏ.ஆர்.ரகுராம் மற்றும் அவரது குழுவினரால் இதய துடிப்பு, இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 4  பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டு கரோனரி ரிவாஸ்குலரைசேஷன் நிறுவப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை பிறகாக  அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது.   இதயத் தீவிர சிகிச்சைப் பிரிவில் பலதரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது.  

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரகுராம் தலைமையில் இந்த   அறுவை சிகிச்சையை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து  அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தமனு இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.  

அமைச்சர் செந்தில் பாலாஜி  ஜூன்   13ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  செந்தில் பாலாஜிக்கு  எடுக்கப்பட்ட பரிசோதனையில்  அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு  செந்தில் பாலாஜி மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த தகவலை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை   அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்இது குறித்து மா.சுப்பிரமணியன் விடுத்த செய்திக்குறிப்பில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் காரணமாக   ஓமந்தூரார் மருத்துவமனையில் பிளட் தின்னர் என்கிற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது   அந்த சிகிச்சை முடிந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. இதனால் இன்று  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

செந்தில் பாலாஜி

தமிழக அரசு  காவேரி மருத்துவமனையுடன் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியதற்கான உடல் தகுதியை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு பெற்றுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு ரத்தப்போக்கு சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இன்று  அதிகாலை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web