அதிர்ச்சி... தஞ்சையில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது!

 
போதைப் பொருள்
தமிழகம் முழுவதுமே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் பழக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் முன்னாள் டிஜிபியின் மகன் போதைப்பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக தஞ்சையில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் பாலித்தீன் பையில் கிடந்த மர்ம பொருளை பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

இந்த ஆய்வில் அது மெத்தம்பேட்டமைன் என்கிற கொடிய போதை பொருள் என்பது தெரிய வந்தது. 900 கிராம் எடை கொண்ட அந்த போதை பொருளின் தற்போதைய மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி என்று கூறப்படுகிறது.

போதைப்பொருட்களின் கடத்தலையும், விற்பனையையும் தடுக்க போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தாலும், இந்த சோதனையும், கட்டுப்பாடுகளும் பற்றாது என்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் விற்பனை கனஜோராக நடந்து வருவதாகவும் பல இடங்களில் மாணவர்களே போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாவது அடுத்த தலைமுறையினர் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!