அதிர்ச்சி.. குடி போதையில் தகராறு.. ஆத்திரத்தில் கட்டவிரலை கடித்துத் துப்பிய நண்பன்!

 
மணிமாறன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முருகன்குடி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள செந்தமிழ் அச்சகம் முன்பு மாயவன் என்பவரின் மகன்  மணிவண்ணன்  அவரது தம்பி மணிமாறன்(வயது -35) இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது  அங்கு குடிபோதையில் இருந்த சுதாகர், கர்ணன் ஆகிய
இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

 மேலும் அங்கு இருந்த மணிவண்ணன், மணிமாறனின் தாய் தந்தையை அசிங்கமாக திட்டியதால்,  இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர்  சண்டை போட்டுள்ளனர்.  அப்போது சுதாகருக்கு ஆதரவாக கலைவாணன்,கமல் கங்குலி, ஆகியோர்களும் சேர்ந்து கொண்டு அடித்துள்ளனர்.  அதேசமயம்  சுதாகர்,  மணிமாறனின் வலது கட்டை விரல் நகம் வரை கடித்து துப்பியுள்ளார்.  

கட்டை விரலை கடித்து துப்பியதால்,   மணிமாறன் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு,  மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பெண்ணாடம் காவல்துறையினர் சுதாகர், கர்ணனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். குடிபோதையில்,  ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு கட்டவிரலை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!