அதிர்ச்சி... மகன் கண் எதிரே தந்தை சுட்டுக் கொலை... 2 பேர் பலி; டெல்லியில் பரபரப்பு!

 
அதிர்ச்சி... மகன் கண் எதிரே தந்தை சுட்டுக் கொலை... 2 பேர் பலி; டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் நேற்றிரவு தீபாவளி கொண்டாட்டத்தின் போது மகன் கண்முன்னே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் தந்தையும், மாமாவும் உயிரிழந்த நிலையில், மகனும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைநகரில் டெல்லியில் ஷாதாரா பகுதியில் உள்ள பிஹாரி காலனியில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு சிறுவன் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


உயிரிழந்தவவர்கள் ஆகாஷ் (40) மற்றும் அவரது மருமகன் ரிஷாப் (16) என அடையாளம் காணப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆகாஷின் 10 வயது மகன் கிரிஷ் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்



போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அவர்கள் மீது 5 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒரு சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது தனிப்பட்ட முன்விரோதம் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சனையின் காரணமாக நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

“நேற்றிரவு 8.30 மணியளவில், பிஹாரி காலனியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், சிலர் காயமடைந்ததாகவும் எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுப் பார்த்தபோது, ​​ஆகாஷ் (40), அவரது மருமகன் ரிஷப் (16), அவரது மகன் கிரிஷ் (10) ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். ஆகாஷும், ரிஷப்பும் உயிரிழந்தனர். சிறுவன் கிரிஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்நிலை விசாரணையில் 5 ரவுண்டு தோட்டாக்கள் சுடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது" என்று டிஜிபி ஷஹ்தரா பிரசாந்த் கவுதம் தெரிவித்தார்.

இறந்த ஆகாஷின் தாய் போலீசாரிடம், “லக்ஷய் என்கிற நபர் கடந்த சில நாட்கள் தங்கள் வீட்டிற்குத் தொடர்ந்து வந்துச் சென்றதாகக் கூறினார். தீபாவளியன்றும் அவர்களது வீட்டிற்கு இனிப்புப் பெட்டியுடன் வந்த லக்‌ஷய், தனது மகன் கிரிஷ் வீட்டிற்கு வெளியே பட்டாசுகளை வெடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​இனிப்பு பெட்டியை என் கையில் திணித்து, உடனடியாக இதைப் பெற்றுக் கொள்ளும் படி கூறினார்” என்று தெரிவித்தார். 

அதிர்ச்சி... மகன் கண் எதிரே தந்தை சுட்டுக் கொலை... 2 பேர் பலி; டெல்லியில் பரபரப்பு!

“என் மகன் பட்டாசு வெடிக்க தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் லக்‌ஷய் உட்பட இருவர் வந்தனர். அப்போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அடுத்து, என் மகன் சுடப்பட்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார். 

ஆகாஷின் சகோதரரும், இறந்து போன இளைஞருமான ரிஷப்பின் தந்தை யோகேஷ் போலீசாரிடம், சுட்டுக் கொல்லப்பட்ட ஆகாஷுக்கு ஒருவருடன் பணம் தொடர்பான தகராறு இருந்து வந்ததாகக் கூறினார்.

தீபாவளி நாளில் மகன் கண் எதிரிலேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!