அதிகாலையில் அதிர்ச்சி... டெல்லி சி.ஆர்.பி.எப்., பள்ளி அருகே குண்டுவெடிப்பு!

 
டெல்லி குண்டுவெடிப்பு

புதுடெல்லியில் ரோகினி பகுதியில் சி.ஆர்.பி.எப்., பள்ளிக்கு வெளியே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வெடிகுண்டு விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையில் போலீசார் குண்டு வெடித்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி, ரோகிணி மாவட்டத்தில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில், சி.ஆர்.பி.எப்., பப்ளிக் பள்ளி அருகே இன்று அக்டோபர் 20ம் தேதி குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி குண்டுவெடிப்பு

குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், இரண்டு தீயணைப்புப் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். வெடிகுண்டு செயலிழப்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!