அதிர்ச்சி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி முல்லை நகரைச் சேர்ந்தவர் இளங்குமரன் (57), எலெக்ட்ரானிக் பொருட்கள் கடை நடத்தி வந்த இவரது மனைவி ரேணுகா தேவி(54), மேல்கரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் வினித் (24), மகள் தேன்மொழி (17). வினித் கோவையில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தேன்மொழி தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், இவர்களது வீடு நேற்று நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, இளங்குமரன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மற்றொரு அறையில் ரேணுகாதேவி, தேன்மொழி ஆகியோர் இறந்து கிடந்தனர். மூவரது உடல்களையும் மீட்ட போலீசார், பழநி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது ரேணுகாதேவி, தேன்மொழியைக் கொலை செய்துவிட்டு, இளங்குமரன் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். வினித் கோவையில் பணிபுரிந்து வருவதால் அவர் தப்பித்தார். அவரிடம் இவர்கள் மர்ம மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!