திருப்பூரில் அதிர்ச்சி... தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சத்துக்கு மேல் மோசடி!

 
செந்தில்குமார்
 


திருப்பூரில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி, ரூ.25 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (42). இவர் திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவு ஜெய்ஸ்ரீ காம்ப்ளஸில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் பல்வேறு வகையான ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில், இவர் நடத்தி வந்த தீபாவளி ஏலச் சீட்டில் திருப்பூரைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் பணம் செலுத்தி வந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.25 லட்சத்துக்கு மேல் வசூல் செய்துவிட்டு, தலைமறைவானார். 

இது குறித்து ஏலச் சீட்டில் பணம் செலுத்தியவர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் லட்சுமியிடம் புகாரளித்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு ராம்குமாரை நேற்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web