அதிர்ச்சி... பெட்ரோல் டேங்கர் லாரிக்குள் வைத்து மதுபாட்டில்கள் கடத்தல்!

 
சரக்கு பாட்டில்
 

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க? என்று நடந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தெறிக்கிறார்கள். நாடு முழுவதுமே ‘குடி’காரர்களின்  சிந்தனை உலக சிந்தனையாளர்களை மிஞ்சிவிடும் அளவுக்கு தான் இருக்கிறது. கொரோனா காலத்துலேயே டாஸ்மாக் மூடப்பட்டிருந்த மாவட்டத்துக்கு வேறொரு மாவட்டத்தில் இருந்து அரிசி மூட்டைக்குள் பாட்டில் பார்சல் அனுப்பச்சொல்லி குடிச்சவங்க நாங்க என்று கமெண்ட்கள் மேலும் மெருகூட்டுகின்றன.

விஷயம் இது தான். பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு தற்போது அமலில் இருந்து வரும் நிலையில், எரிபொருள் டேங்கரில் மதுபான பாட்டில்களைப் பதுக்கி பீகாருக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

சரக்கு

இந்துஸ்தான் பெட்ரோலிய டேங்கர் லாரியில் இப்படி சுமார் 200 மதுபான பெட்டிகளை வைத்து கடத்தி சென்றுள்ள நிலையில், இதனை வாகன சோதனையில் கண்டுபிடித்து, டேங்கர் லாரியை கலால் காவல் நிலையத்துக்கு போலீசார் கொண்டுச் சென்றனர். 

பீகாரில் டேங்கர் லாரியில் மதுபானம் கடத்தப்படுவது குறித்து கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும், கடத்தல்காரர்களை கைது செய்ய குழு ஒன்றை அதிகாரிகள் அமைத்ததுடன், டேங்கர் லாரி வந்துக் கொண்டிருந்த சாலையையும் மறித்தனர். 

திடீரென சாலையில் போலீசார் மறித்து நிற்பதைக் கண்ட கடத்தல்காரர்கள் டேங்கர் லாரிய அந்த வழியே இயக்காமல் தேசிய நெடுஞ்சாலைக்கு திருப்பினர். கடத்தல்காரர்கள் தப்பி ஓடிய நிலையில், நாகாலாந்து மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட டேங்கர் லாரியைத் துரத்திப் பிடிக்க முயற்சித்த போலீசார் முசாபர்பூர் பகுதியில் தடுத்து நிறுத்தி, லாரியைக் கைப்பற்றி சோதனையிட்டனர். 

இது குறித்து பேசியுள்ள கலால் வரி உதவி ஆணையர் விஜய் சேகர் துபே, ” நாங்கள் டேங்கர் லாரியை துரத்திச் சென்ற போது, ஓட்டுநரும் மதுபான வியாபாரியும் டேங்கர் லாரியை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி முசாபர்பூர் பகுதியில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது அருணாசல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டது. மதுபாட்டில்களை கடத்திய உள்ளூர் வியாபாரி அடையாளம் காணப்பட்டு, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால், அங்கே பல இடங்களில் திருட்டுதனமாக மதுபானம் விற்கப்படுகிறது. மேலும், மாநிலத்துக்குள் மதுபானம் கொண்டுவர கடத்தல்காரர்கள் அடிக்கடி புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆம்புலன்ஸ்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் லாரிகளில் பலமுறை மதுபானங்கள் பிடிபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web