அதிர்ச்சி... மோமோஸ் சாப்பிட்ட இளம்பெண் மரணம்; 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
ரேஷ்மா
 

 

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சாலையோர கடை ஒன்றில் இருந்து மோமோஸ் சாப்பிட்ட 31 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.வெவ்வேறு நாட்களில் ஒரே கடையில் இருந்து மோமோஸ் சாப்பிட்ட 15 பேருக்கும் உணவு விஷமாகியதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேமோஸ்

ரேஷ்மா பேகம் என அடையாளம் காணப்பட்ட 31 வயதுடைய இளம்பெண், கைரதாபாத் சிந்தல் பஸ்தியைச் சேர்ந்தவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடத்தி வந்த சாலையோரக் கடையில் இருந்து மோமோஸ் வாங்கி சாப்பிட்டது போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இங்கு தள்ளுவண்டியில் இந்த கடையைத் துவங்கி உள்ளனர். மோமோஸ் சாப்பிட்டு ரேஷ்மா உயிரிழந்த நிலையில், அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மோமோஸ் சாப்பிட்ட அடுத்த சில மணி நேரங்களில் ரேஷ்மா உடல்நிலை சரியில்லாமல் போனதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் ரேஷ்மாவை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரேஷ்மா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

ரேஷ்மா

இது தொடர்பில் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. அப்பகுதியில் உரிமம் இன்றி செயல்படும் உணவுக்கடைகளை உடனடியாக மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லி மோமோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கடையில் தயாரிக்கப்பட்ட உணவின் மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web