அதிர்ச்சி... கல்லூரி மாணவர் உட்பட கஞ்சா வழக்கில் 2 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீப காலங்களாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலுமே மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகி வருகின்றனர்.
பல குற்றச்செயல்களில் கஞ்சா போதையில் மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி வடபாகம் போலீசார் அம்பேத்கர்நகர், முல்லை நகர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தூத்துக்குடி கோயில்பிள்ளை விளையை சேர்ந்த ஜேசுபாலன் மகன் தினேஷ் (36) மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்தது.
அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!