அதிர்ச்சி... வாகன சோதனையில் போலீசார் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து கலவரப்படுத்திய இளைஞர்கள்!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது, பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டு தப்பித்துச் செல்ல முயன்ற 2 இளைஞர்களை போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மின் வாரிய அலுவலகம் அருகே நேற்று அதிகாலை அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மடக்கி நிறுத்தி, வாகனத்தில் இருந்த இரு இளைஞர்களிடம் விசாரணை செய்தனர்.

அதில் ஒருவர் திடீரென தான் மறைந்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேயை எடுத்து போலீசாரின் முகத்தில் அடித்து விட்டு தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த 2 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கோகுல் (27), திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த கோகுல்நாத் (21) என்பது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், இரும்புக் குழாய்கள், திருப்புளி, முகமுடி, கையுறை, பெப்பர் ஸ்பிரே, 2 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவை இருந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் வெள்ளியணை பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து திருடுவதற்கு வந்திருந்தது தெரியவந்தது. இதில் கோகுல் மீது திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 24 வழக்குகளும், கோகுல்நாத் மீது திருச்சி மாவட்டத்தில் 4 வழக்குகளும் நிலுவையில் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
