அதிர்ச்சி வீடியோ... நடுரோட்டில் 15 வயது சிறுமியைக் கட்டிப்பிடித்து சில்மிஷம்! அடுத்தடுத்து தொடரும் அத்துமீறல்கள்!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாகவே அதிகரித்து வரும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த 15 வயதுச் சிறுமியிடம், வாலிபர் ஒருவர் நடுரோட்டில் வலுக்கட்டாயமாக சில்மிஷம் செய்தி திடீரென கட்டிப்பிடித்து பாலியல் தொல்லைத் தரும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைராகி வரும் சிடிவி கேமரா பதிவு வீடியோ காட்சிகள், இளைஞர் ஒருவர் சிறுமியின் கையைப் பிடிப்பதையும், கையைப் பிடித்த பிறகு திடீரென வலுக்கட்டாயமாக சிறுமியைக் கட்டிப்பிடிப்பதையும் காட்டுகிறது. இருப்பினும் அவரின் பிடியில் இருந்து அந்த சிறுமி தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்.
#मेरठ में बदमाश ने सरेआम मंदिर से लौट रही किशोरी से छेड़छाड़ की है
— Narendra Pratap (@hindipatrakar) November 1, 2024
उसका हाथ पकड़कर खींचा, उसे जबरन आलिंगन किया. वह किसी तरह बदमाश के पाश से छूटकर भागी
भावनपुर पुलिस ने केस दर्ज किया है. बदमाश की तलाश पूरी होते ही गति को प्राप्त होगा pic.twitter.com/30o6itByIX
#मेरठ में बदमाश ने सरेआम मंदिर से लौट रही किशोरी से छेड़छाड़ की है
— Narendra Pratap (@hindipatrakar) November 1, 2024
उसका हाथ पकड़कर खींचा, उसे जबरन आलिंगन किया. वह किसी तरह बदमाश के पाश से छूटकर भागी
भावनपुर पुलिस ने केस दर्ज किया है. बदमाश की तलाश पूरी होते ही गति को प्राप्त होगा pic.twitter.com/30o6itByIX
கோவிலில் இருந்து வீடு திரும்பும் வழியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் சிறுமி தெரிவித்த நிலையில், குடும்பத்தினர் பவன்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
எஸ்பி தேஹத் ராகேஷ் குமார், குற்றம் சாட்டப்பட்டவர் அமித் என்ற நபர் என அடையாளம் காணப்பட்டதும் எஃப்ஐஆர் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி, கோயிலுக்குச் சென்றுவிட்டு தன் மகள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த அமித் எனும் இளைஞர், தனது மகளிடம் தகாத முறையில் தொட்டு, வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து துன்புறுத்தினார். எனினும் தனது மகள் அவரிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு விரைந்து வந்து அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்" என்று கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
