அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனையில் கணவர் மரணம்... கர்ப்பிணி மனைவியை படுக்கையின் ரத்தக்கறைகளைச் சுத்தம்செய்ய சொல்லி கொடூரம்!

 
கர்ப்பிணி மனைவியை படுக்கையின் ரத்தக்கறைகளைச் சுத்தம்செய்ய சொல்லி கொடூரம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கணவர் உயிரிழந்த நிலையில், படுக்கையில் இருக்கும் ரத்தக்கறைகளை அவரது ஐந்து மாத கர்ப்பிணி மனைவியைச் சுத்தம் செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. இந்த துயரக் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில்  பரவலான சீற்றத்தைத் தூண்டி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் லால்பூர் பகுதியில் கடசரையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப தகராறில் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவரது ரத்தக்கறைகளை சுத்தம் செய்ய சொல்லி இறந்தவரின் 5 மாத கர்ப்பிணிப் பெண்ணைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். 

இந்த வீடியோ கடும் எதிர்வினைகளை குவித்து பொதுமக்கள் கொந்தளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் சிங்கின் உத்தரவுக்கு பதிலளித்து, தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் ரமேஷ் மராவி, டாக்டர் சந்திரசேகர் சிங், செவிலியர் ராஜ்குமாரி மற்றும் பிற உதவியாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். 

கர்ப்பிணி மனைவியை படுக்கையின் ரத்தக்கறைகளைச் சுத்தம்செய்ய சொல்லி கொடூரம்

எனினும், அந்தப் பெண், தனது கணவரின் படுக்கையை தானே சுத்தம் செய்ய துணியைக் கேட்டார். ஊழியர்கள் உடனிருந்ததாகவும், அந்தப் பெண் எந்த துப்புரவுப் பணியையும் செய்ய அறிவுறுத்தப்படவில்லை என்றும் மருத்துவமனை ஆரம்பத்தில் கூறி சமாளித்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!