சிம்பிளான ரெஸிப்பி... தீபாவளி லேகியம் செய்முறை இது தான்.. எத்தனை பலன்கள் தெரியுமா?
எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு எண்ணெய் பலகாரங்கள், ஸ்வீட் வகைகள், உணவு அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம். இதனால் அஜீரணம், வயிற்றுக்கோளாறுகள் ஏற்படலாம்.
அடுத்ததாக எப்போதும் தீபாவளி என்பது மழைக்காலத்தில் வருகிறது. இந்த காலகட்டத்தில் உருவாக்கும் மழைத்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்க மசாலாக்களை பயன்படுத்தி இந்த லேகியம் தயாரிக்கப்படுகிறது.
தீபாவளி லேகியம்:
தேவையான பொருட்கள் :
தனியா விதை – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
சுக்குத்தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 1
வெல்லம் – 100கி
செய்முறை :
தனியா, மிளகு, சீரகம், ஓமம் இவற்றை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் சுக்கு சேர்த்து லேசாக சூடு ஆறவிடவும். இதனை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து வெல்லப்பாகு தயாரிக்கவும்.
கொஞ்சம் கெட்டிப்பதம் வந்ததும் அரைத்த பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். நன்கு கலந்து விட்டதும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். சிறிது நல்லெண்ணெய் விட்டு உடனே அடுப்பை அணைக்கவும்.
சூடு ஆறியதும் சிறிய டப்பாவில் போட்டு மூடிவிடவும். தீபாவளி தினத்தில் காலை இதனை வீட்டில் அனைவருக்கும் கொடுக்க செரிமானக் கோளாறுகள், வயிறு மந்தமான நிலை உருவாவதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!