அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டுகளால் சிறப்பு அலங்காரம்... குவிந்த பக்தர்கள்!
தீபாவளித் திருநாளை முன்னிட்டு கோவை மேற்கு திருவேங்கடசாமி சாலையில் அமைந்துள்ள அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் நேற்று ஆயிரத்து எட்டு லட்டுகளால் அன்னபூர்ணேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே அன்னபூர்ணேஸ்வரி கோயிலில் குவித்து தரிசித்து சென்றனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் அன்னபூர்ணேஸ்வரி கோவிலும் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலில் தீபாவளித் திருநாளான நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், பூஜைகளை தொடர்ந்து,அம்பாளுக்கு ஆயிரத்து எட்டு லட்டுகளால் தேர் போன்று அலங்கரிக்கப்பட்டு அதில் அம்பாளுக்கு சுவர்ண ரத்ன கவசம் அணிவிக்கப்பட்டு அன்னை அன்னபூர்னேஸ்வரி அருள்பாலித்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தீபாவளியன்று நடைபெறும் இந்த சிறப்பு பூஜைகளில் பலரும் பங்கேற்று வழிபாடு செய்தனர். கோவில் வளாகத்திலுள்ள யோக நரசிம்மர் சன்னிதியில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார் அவருக்கும் லட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளானோர் சுவாமியை தரிசித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!