தீபாவளி ஸ்பெஷல் : கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்
நாளை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தீபாவளியையொட்டி, அக்டோபா் 30, 31, நவம்பா் 1, 2, 4, 5, 6 தேதிகளில் காலை 9.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - திண்டுக்கல் மெமு ரயில் (எண்: 06106) அன்றைய தினம் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

அதே போல் மறு மாா்க்கத்தில் அக்டோபா் 30, 31, நவம்பா் 1, 2, 4, 5, 6 தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திண்டுக்கல்- கோவை மெமு ரயில் (எண்: 06107) மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
