தீபாவளி ஸ்பெஷல்... இந்தியா முழுவதும் 164 சிறப்பு ரயில்கள்... !

 
ரயில்

 இந்தியா  முழுவதும் தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்பட உள்ளது.   நன்மை வெற்றி பெற்றதற்கான அடையாளமாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கடவுள் மகாலட்சுமியிடம் செல்வ வளம் வேண்டி வழிபாடு செய்வதுடன், சுவையான இனிப்புகளை பகிர்ந்து கொள்வது மற்றும் பரிசுகளை பரிமாறி கொள்வதாக வடமாநிலங்களில் சத் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதே போல் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கி  ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான மனவுறுதியை வளர்த்தெடுக்கும் வகையில், பல வண்ணங்களை வெளியிடும் பட்டாசுகளை இரவில் வெடித்து மகிழ்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.  

ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

இந்நிலையில், சத் மற்றும் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில், 164 சிறப்பு ரயில்களை இயக்குவது என இந்திய ரயில்வே முடிவு செய்து உள்ளது. இதன்படி, இந்த ரயில்கள் சரியான நேரத்தில் மக்களை இன்று அவர்களுடைய இடங்களுக்கு கொண்டு சேர்க்கும்.  இதற்கான விரிவான ஏற்பாடுகளை ரயில்வே செய்துள்ளது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.   இந்த ரயில்கள் செகந்திராபாத், ஆமதாபாத், கோட்டயம், உஜ்ஜைன், போபால், புதுடெல்லி, நாக்பூர் போன்ற நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பட்டாசு

இதன் மூலம் 7000 கூடுதல் பயணங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். இத்துடன் ரயில்வே போலீஸ் படை, வர்த்தக மற்றும் பிற சுய உதவி குழுக்களும் பயணிகளின் வசதிக்காக இந்த பணியில் ஈடுபடுவார்கள் எனக்  கூறியுள்ளார். கூட்ட நெரிசல் ஏற்பட சாத்தியமுள்ள ரயில் நிலையங்களில், பயணிகள் அமர்வதற்கு மற்றும் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web