சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை வெள்ளம்!! வாகன ஓட்டிகள் கடும் அவதி!!

 
rain

தென்கிழக்கு வங்கக்கடல்  பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது.  குறிப்பாக சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல்  பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல்  விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.  இந்நிலையில்  அடுத்த 3 நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

rain


கனமழை காரணமாக  கிண்டி கத்திப்பாரா சுரங்கப் பாதையில் முழுமையாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால்  சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.  வடபழனி,  அசோக் பில்லர்,  கோயம்பேடு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர். இந்த பாலத்தில்  சுமார் ஒரு அடி உயரத்தில் மழை நீர் தேங்கினால்,  உடனடியாக  ஆட்டோமேட்டிக் மின் மோட்டார் தானாக இயங்கி மழைநீரை அகற்றுமாறு அமைக்கபட்டுள்ளது.

உ.பி கன மழை

ஆனால் இந்த மோட்டார் செயல்படாததால் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளது.  செம்பியம், கொளத்தூர், தலைமை செயலகம்  , மைலாப்பூர், கிண்டி,  தி நகர், நங்கநல்லூர் உட்பட  8 இடங்களில் மழையின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இந்த மரங்களை  உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   அதேபோல் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web