சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!! தொடரும் சோகம்!!

 
தெருநாய்கள்


 
கேரளா மாநிலம் கண்ணூர் முழபிலாங்காடு பகுதியில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்து வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறின. வாய் பேச முடியாத சிறுவனை தெரு நாய் கடித்து கொன்ற நிலையில் அதே பகுதியில் மீண்டும் தெரு நாய் தாக்குதல் சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்ஓது பாச்சாக்கரை எல்பி பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் ஜான்விக் என்ற மாணவியை தெருநாய் கடித்துள்ளது.  3 தெருநாய்கள் சேர்ந்து சிறுமியை கடித்து தாக்கின. வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து இழுத்துச் சென்று தாக்கும் வீடியோ குறித்த   பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.  தெரு நாய்கள் கடித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் தலை, வயிறு, தொடை மற்றும் கைகளில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.

நிஹால்

சில நாட்களுக்கு முன், கண்ணூர் முழுபிலங்காட்டில் இதே பகுதியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   இச்சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படி நிஹாலின் மரணத்திற்குப் பிறகு, முழுபிலாங்காடு பகுதியில் இருந்து சுமார் 31 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

நிஹால்
கேரளாவில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் கடித்து பலர் உயிரிழந்தனர். அதே போல் நூற்றுக்கணக்கான மக்கள் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மக்களின் உயிர் பறிக்கும் தெரு நாய்களை கொல்ல சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசு நடவைக்கை எடிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதே நேரத்தில் இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது விலங்குகளை வதை செய்யும் பிரச்சனையும் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள்   விலங்குகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தி   தெரு நாய்களின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web