திடீர் அறிவிப்பு... வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறும் தேதிகள் மாற்றம்!

 
வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில்  நவம்பர் 9 மற்றும் 10  தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென இந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். 

வரைவு வாக்காளர் பட்டியல்

இது குறித்து  தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10.2024 முதல் 06.01.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கிறது.  

வாக்காளர் பட்டியல்

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 09.11.2023, 10.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை)  தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில்  தமிழக அரசால் நவம்பர் 9ம் தேதி  பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்பு முகாம் தேதிகளை  நவம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் மாற்றியமைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web