தவெக மாநாட்டில் விஜய்க்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. தாய், தந்தை நெகிழ்ச்சி ஏற்பாடு!
இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர். கேரளா, கர்நாடகத்தில் இருந்தும் ரசிகைகள் குவிந்து வருவது விஜய் கட்சியினரே எதிர்பார்க்காத ட்விஸ்ட். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்த மாநாடு நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநாடு சிறப்பாக நடைபெற சென்னை கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவிலில் ஷோபா, சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர். சாய்பாபாவுக்கு தவெக கொடியுடன் கூடிய மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். தளபதி விஜய்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். பெரிய நிலைமைக்கு வரவேண்டும் என்றார்.
இந்நிலையில் மாநாட்டு மேடையில் விஜய்க்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுக்க உள்ளனர் ஷோபாவும், எஸ்.ஏ.சந்திரசேகரும். அது என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சாய்பாபா அணிவித்த தவெக மாலையை விஜய்க்கு அணிவிப்பார்கள். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விஜய் நேற்று இரவு விக்கிரவாண்டி வந்தார். அங்கு வாடகை வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டில் இருந்து மாநாட்டுக்கு வருவதற்கு கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு பொதுமக்களுக்கு சிற்றுண்டி பொட்டலங்களும் வழங்கப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க