பிரபல தமிழ்பட நடிகர் 4வது திருமணம்... திரையுலகினர் வாழ்த்து!

 
பாலா

பிரபல தமிழ் பட நடிகர் பாலா தனது மாமா மகளான கோகிலா என்பவரை நேற்று காலை திருமணம் செய்து கொண்டார். இது நடிகர் பாலாவின் நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதல் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருந்தது. நேற்று காலை நடைபெற்ற இந்த திருமண விழாவில் பாலாவின் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பாவக்குளம் கோயிலில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த பாலா தனது உறவினரான கோகிலாவை இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். எனது திருமணம் எனது தாயின் மிகப்பெரிய விருப்பம். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் திருமணத்திற்கு வர முடியவில்லை, என்று பாலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

பாலா

கோகிலா சிறு வயதிலேயே பாலாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், கடவுள் அதை இப்போது சாத்தியப்படுத்தியிருக்கிறார். ரசிகர்கள் எங்களை  ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த ஒரு வருடமாக எனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நல்ல தூக்கம், உணவு மற்றும் மன அமைதி கிடைத்தது. அப்போது கோகிலா என்னுடன் நின்றாள். கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது என்றார். மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு தேவை என்றும் பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாலா

பாலா தனது முதல் திருமணத்தின் சட்ட நடைமுறைகளை முடித்திருந்தார். அவரது இரண்டாவது மனைவி எலிசபெத்துடனான அவரது திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. எனவே அவரது தற்போதைய திருமணத்தில் சட்டச் சிக்கல்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. நடிகர் பாலாவுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web