தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அடுத்த நாள் நவம்பர் 1ம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி விடுமுறை விடப்படுவதால், அதனை ஈடு செய்ய நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
