தமிழகம் முழுக்க இந்த மாதம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

தமிழகம் முக்கிய அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் இம்மாதம் முழுவதும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.
தூத்துக்குடி கோட்டத்தில் தூத்துக்குடி தலைமை அஞ்சலகம், திருச்செந்தூர் தலைமை அஞ்சலகம், ஸ்ரீவைகுண்டம் தலைமை அஞ்சலகம் உள்ளிட்ட 35 அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5 மற்றும் 10 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50, கைரேகை கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ.100 ஆகும்.
பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு சிறப்பு ஏற்பாடாக அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை ஆதார் தூத்துக்குடி அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு!சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!