'டாணா' புயல் நாளை கரையை கடக்கும்.. 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
வங்கக்கடலில் நிலைபெற்றுள்ள 'டாணா' புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் நாளை அக்டோபர் 25ம் தேதி ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
தற்போது அது ஒடிசாவின் தென்கிழக்கே 490 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் புயல் ஒடிசாவின் பித்ராகானிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடையே நாளை அக்டோபர் 25ம் தேதி கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும் போது கனமழையுடன், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கேந்திராபாரா, பாத்ராக், பாலசோர் உட்பட 14 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் 10 லட்சம் பேர் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். ஒடிசாவில் உயர்நீதிமன்றம் 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. புவனேஸ்வர் விமான நிலையத்தில் 16 மணி நேரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரயில்வே அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் ரயில்களை ரத்து செய்துள்ளன. மேற்கு வங்கத்திலும் டானா புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!