தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை ரூ.438 கோடி... கடந்த வருடத்தை விட பெரும் சரிவு... இது தான் காரணமா?!

 
குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை ரூ.438 கோடியே 53 லட்சம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரூ.29 கோடி விற்பனை சரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 20 வருடங்களாகவே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் தான் பலரும் மது அருந்தி வந்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை கோடிகளைத் தாண்டி அரசுக்கும் வருமானம் குவிந்தது. 

தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ள நிலையில் தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடப்பது வழக்கம். வார இறுதி நாட்களின் மது விற்பனை ரூ.200 கோடியைத் தாண்டிச் செல்கிறது. பண்டிகை நாட்கள் ஒரு நாள் விற்பனை எளிதாக ரூ.250 கோடியைத் தாண்டி விடும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் சொல்கிறார்கள். 

டாஸ்மாக்

இந்நிலையில், இந்த வருட தீபாவளி தொடர் விடுமுறை தினங்களில் டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளது. தீபாவளிக்கு முன் தினம் அக்.30ம் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளியன்று ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் விற்பனையாகி, மொத்தமாக 2 நாட்களும் சேர்த்து ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆனால் கடந்த 2023ல் தீபாவளிக்கு முன் தினம் மற்றும் தீபாவளி விற்பனை என இரு நாட்களுக்கும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு விற்பனையாகி இருந்ததாக தெரிகிறது. இந்த ஆண்டு ரூ.29 கோடியே 10 லட்சம் விற்பனை சரிந்ததற்கு மாத கடைசியில் தீபாவளி பண்டிகை வந்ததும், விஜய் மாநாடும் ஒரு காரணம் என்கிறார்கள். 

டாஸ்மாக் மது எலைட்

தீபாவளி செலவுகள் ஒருபுறம், விஜய் மாநாட்டிற்கு கிளம்பி வந்து சென்ற செலவுகள் மறுபுறம் என விற்பனை குறைந்த நிலையில், பலரும் மகிழ்மன்றங்கள், தனியார் பார்களுக்குச் சென்றதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் 1,500 குறைந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் மண்டல வாரியாக தீபாவளியன்று நடைபெற்ற மதுவிற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சென்னையில் 54.18 கோடிக்கும், மதுரையில் 47.73 கோடிக்கும், திருச்சியில் 46.51 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சேலத்தில் 45.18 கோடிக்கும், கோவையில் 42.34 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!