தவெக மாநாடு அப்டேட்.. காலையிலேயே டிவி முன் அமர்ந்த புதுச்சேரி முதல்வர்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போதே மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், தவெக மாநாடு குறித்த செய்திகளை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளார்.
நேற்றும் மாநாடு குறித்த செய்திகளை டி.வி.யில் தீவிரமாகப் பார்த்தார். நடிகர் விஜய் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர். புதுச்சேரியைச் சேர்ந்தவர் புஸ்சி ஆனந்த். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். 2006-ம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், புஸ்ஸி சட்டமன்றத் தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பெரும் பங்கு உண்டு. இதனால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தவெக மாநாடு குறித்த செய்திகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க