அரசுப் பேருந்தில் பயங்கர தீ விபத்து... 2 பயணிகள் காயம்!

 
பேருந்து
 

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று நடுரோட்டில் சென்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் காயமடைந்தனர்.டெல்லியில் நேற்று மாலை சுமார் 15 பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

நேற்று மாலை 5.15 மணியளவில் அரசு பேருந்து ஒன்று  ரிங்ரோட்டை அடைந்த போது திடீரென பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை கிளம்புவதை ஓட்டுநர் கண்டறிந்தார். உடனடியாக அவர் தீயணைக்கும் கருவியைப் பயன்படுத்தி பேருந்தில் இருந்த தீயை அணைத்தார். பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளும் கீழே இறங்கிய நிலையில், இந்த தீ விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு குழந்தை உட்பட இருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து

பேருந்தில் தீ பிடித்து எரிந்ததற்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து குற்றவியல் மற்றும் தடவியல் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!