பகீர் காட்சிகள் ... ராணுவ ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு!

 
ராணுவ ஆம்புலன்ஸ்


 
 
ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை ஜோக்வானில் உள்ள அசன் கோயில் அருகே ராணுவ ஆம்புலன்ஸ் முக்கியசாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராதவிதமாக  3  பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து  கோரின் பட்டால் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக  தெரிகிறது.  உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.


இது குறித்து ராணுவ அதிகாரிகள் ”  ஆம்புலன்ஸ் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ஒரு டஜன் தோட்டாக்களால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க போலீசாருடன் இணைந்து ராணுவம் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.  
 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!