தஞ்சை டூ விக்கிரவாண்டி... விஜய் மாநாட்டிற்கு ஒற்றைக்காலுடன் சைக்கிள் ஓட்டி சென்ற மாற்றுத்திறனாளி!

 
ராஜா மாற்றுத்திறனாளி விஜய்

தஞ்சாவூரில் இருந்து விக்கிரவாண்டி வரை நடிகர் விஜயின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக 200 கி.மீ. தூரம் ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி சென்ற மாற்றுத்திறனாளி ராஜா எனும் ரசிகருக்கு பாபநாசத்தில சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜா மாற்றுத்திறனாளி விஜய்

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான மாற்றுத்திறனாளி ராஜா (45) என்பவர், தஞ்சாவூரில் இருந்து விக்கிரவாண்டிக்கு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார். அவர் பாபநாசம் வந்தடைந்த போது, அவருக்கு பாபநாசம்  விஜய் மன்ற நிர்வாகிகள் சால்வை அணிவித்து அவருக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்து, ராஜாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.

ராஜா மாற்றுத்திறனாளி விஜய்

தனது 13 வது வயதில் விபத்து ஒன்றில் தனது ஒரு காலை இழந்ததாகவும், எந்தவொரு கட்சியிலும் மாற்றுத் திறனாளி அணி என ஒரு பிரிவு இல்லை எனவும் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுத்திறனாளி அணி உருவாக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு பொறுப்புகள் வழங்கி மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்தி, விஜயின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனது ஒற்றைக்காலில் சுமார் 200 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டிச் செல்வதாக கூறினார். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web