115 வயது... உலகின் 3 வது வயதானவராக அறியப்பட்ட அமெரிக்க மூதாட்டி காலமானார்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் வசித்து வருபவர் எலிசபெத் பிரான்சிஸ் . அமெரிக்காவில் வயதானவராக அறியப்படும் இவரது வயது 115. அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதானவராக அறியப்பட்ட இவர் உலகின் 3வது வயதானவராகவும் இருந்தார். கடந்த சில நாட்களாக எலிசபெத்துக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். 5 தலைமுறைகளைக் கண்ட அவரது மறைவுக்கு மகள், பேத்தி என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை எலிசபெத் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்சாஸின் ஹூஸ்டனில் கழித்துள்ளார்.
1909ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் பிறந்த எலிசபெத் பிரான்சிஸ் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை காணும் வாய்ப்பை பெற்றவர். இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 115-வது பிறந்தநாளில் எலிசபெத், நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
